தேசிய விலங்கியல் பூங்கா, டெல்லி
இந்தியாவின் புது தில்லியிலுள்ள விலங்குக் காட்சி சாலைதேசிய விலங்கியல் பூங்கா 176-ஏக்கர் (71 ha) கொண்ட இது இந்தியாவின் புது தில்லியிலுள்ள விலங்குக் காட்சி சாலையாகும். 16 ஆம் நூற்றாண்டின் கோட்டை, பரந்த பசுமையான தீவு மற்றும் விலங்குகள் மற்றும் பறவைகளின் பல்வேறு சேகரிப்பு, இவை அனைத்தும் வளர்ந்து வரும் நகர்ப்புற தில்லியின் நடுவில் உள்ளன. இந்த மிருகக்காட்சிசாலையில் சுமார் 1350 விலங்குகள் உள்ளன. அவை உலகெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 130 வகையான விலங்குகள் மற்றும் பறவைகளை குறிக்கின்றன. மிருகக்காட்சிசாலையை கால்நடையாகவோ அல்லது மின்கலம் மூலம் இயக்கப்படும் வாகனத்தைப் பயன்படுத்தியோ பார்வையிடலாம். பார்வையாளர்கள் குடிநீர் தவிர வேறு எந்த உணவையும் கொண்டு வர அனுமதி இல்லை. ஆனால் மிருகக்காட்சிசாலையில் ஒரு உணவு விடுதி உள்ளது. 2014 ஆம் ஆண்டில் மனநோயாளியாக இருந்த ஒரு பார்வையாளர், வெள்ளை புலிகள் அடைக்கப்பட்ட இடத்தில் விழுந்ததால் கொல்லப்பட்டார்.






